Editorial / 2025 மே 06 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி செல்வாநகர் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக வாள்களுடன் நின்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாக்குச்சாவடிக்கு முன்பாக சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) சோதனையிட்ட போது
அதனுள் வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து காரில் வந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், வாளும் கத்தியும் கைப்பற்றப்பட்டு, அவர்களது காரும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .