Editorial / 2025 ஜனவரி 26 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் வாழைச்சேனையில் காணாமல் போயுள்ளனர்
வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் சனிக்கிழமை (25) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே காணாமல் போய்யுள்ளனர்.
இந்த இருவரும் காய்கறிகளை சேகரித்துவிட்டு வயல்களில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது புலிப்பாஞ்சிகல் ஓயாவின் அடித்துச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன இருவரையும் கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago