Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Nirosh / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ஆணைக்குழு மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாதொழித்த, விசர் பூனையின் ஆணைக்குழு என விமர்சிக்கப்படும், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் உபாளி அபேவர்தனவுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்னவென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தின் இன்றைய (07) அமர்வில் கலந்துகொண்டு நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் வினாவை எழுப்பி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை என்கிற பெயரில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருந்த அந்த ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்களது குடியுரிமையைப் பறிக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்குதாக்கல் செய்திருந்தேன். இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்னவெனவும் இதன்போது வினவினார்.
மேலும், இந்த ஆணைக்குழுவுக்கு செலவு செய்யப்பட்ட நிதி எவ்வளவு என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அநுர கேட்டுக்கொண்டார்.
11 minute ago
11 minute ago
23 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
23 minute ago
37 minute ago