R.Maheshwary / 2020 நவம்பர் 01 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை மாவட்டத்திலுள்ள சகல தங்குமிட விடுதிகளையும் மூடுவதற்கும் சுற்றுலா பயணத்தடையை விதிக்கவும், கேகாலை மாவட்ட கொரோனா ஒழிப்பு குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் இதுவரை 115 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 66 பேர் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2,707 பேர் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுள் 8 வைத்தியர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago