2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைப்பெற்றுமுடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதற் கட்ட நடவடிக்கை, எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி வரை இடம்பெறுமென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

84 பாடசாலைகளில் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன்,சுமார் 30,000 பேர் மதிப்பீட்டுப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனரென,பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம் மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இடம்பெற்ற, கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சையில்,6,56,641 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில், 4,22,850 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .