2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

விதானையார் கொலை; விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல்  2021 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் சந்தேகநபர் நேற்று (30) ஆஜர்படுத்தப்பட்ட போது, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.  

கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேலதிக அறிக்கை நீதிமன்றில் நேற்று (30) சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், சம்பவம் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை, இதுவரை கிடைக்கவில்லை எனவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, சந்தேகநபர் தொடர்பான சட்ட மருத்துவ அறிக்கை , நீதிமன்றத்துக்கு நேரடியாகச் சமர்ப்பிக்கப்படும் என, சிறைச்சாலைகள் அதிகாரிகள், மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு நேற்று (30) அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .