Editorial / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்சியின் நடத்தை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், நேற்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி, அமைச்சர் பிரேமதாஸவை வரவேற்பதற்காக, பதுளை மாநகரில், அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவால், நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, அமைச்சர் பிரேமதாஸவை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, அமைச்சர் அகிலவிராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கட்சியிலுள்ள அமைச்சர்களால் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்வுக்கும், கட்சி தடையாக இருக்காது என்றும் ஆனால், இந்த நிகழ்வின்போது, கட்சியின் நடத்தை விதிமுறைகள் மீறப்படாமல் இருக்கவேண்டும் என்றும் அவ்வாறு மீறப்பட்டால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago