Editorial / 2025 ஜூன் 25 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50). தொழில் அதிபரான இவர், தேக்குமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் வாரத்துக்கு ஒருமுறை சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு சென்று மசாஜ் செய்வது வழக்கம்.
அந்த கிளப்பில் பணியாற்றிய ஆண்ட்ரியா என்ற ஆங்கிலோ-இந்திய மசாஜ் அழகியுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம்.
கடந்த மாதம் 29-ம் திகதி ஆண்ட்ரியா, தொழிலதிபர் சார்லசுடன் செல்போனில் பேசினார். சூளைமேட்டில் வசிக்கும் தனக்கு தெரிந்த ரேகா சாவித்திரி (60) என்பவர் சொகுசு விடுதி நடத்தி வருகிறார் என்றும், அங்கு வந்தால் வித்தியாசமான உல்லாசத்தை அனுபவிக்கலாம் என்றும், இன்ப விருந்து அங்கு காத்திருக்கிறது என்றும் சார்லசுக்கு அழைப்பு விடுத்தார்.
இதை உண்மை என்று நம்பி சூளைமேட்டில் உள்ள குறிப்பிட்ட சொகுசு விடுதிக்கு சார்லஸ் சென்றார். அங்கே ரேகா சாவித்திரி என்ற பெண்ணும் 2 வாட்டசாட்டமான ஆண்களும் இருந்தனர். விடுதிக்குள் சென்ற உடனேயே அங்கிருந்த ஆண்கள் இருவரும் தங்களை பொலிஸ்காரர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு, சார்லசை சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் சார்லஸ் மயங்கி விழுந்தார். இதை பயன்படுத்திக்கொண்டு சார்லஸ் அணிந்திருந்த 20 பவுன் தங்கச்சங்கிலி, கைச்சங்கிலி ஆகியவற்றையும் விலை உயர்ந்த கைக்கெடிகாரத்தையும் பொலிஸார் என்று கூறிய 'டிப்டாப் ஆசாமிகள்' இருவரும் சேர்ந்து பறித்தனர்.
'கூகுள் பே' மூலம் சார்லசின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தையும் அபகரித்தனர். பின்னர் சார்லசை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் சூளைமேடு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குறிப்பிட்ட சொகுசு விடுதிக்கும் சென்று பொலிஸார் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த சொகுசு விடுதியில் யாரும் இல்லை. அதே சமயம், மசாஜ் அழகி ஆண்ட்ரியாவும் அவரது காதல் கணவர் கோகுல கிருஷ்ணனும்தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில், மசாஜ் மோசடி ராணி ரேகா சாவித்திரியும், பொலிஸ்காரராக நடித்த நவீன்குமார் (23) என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவான ஆண்ட்ரியாவையும், அவரது காதல் கணவர் கோகுல கிருஷ்ணனையும் போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே அவர்கள் இருவரும் மேட்டுப்பாளையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. அவர்களது மோசடி லீலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago