Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 மார்ச் 26 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் விந்தணு வங்கியில் ஏற்கெனவே சுமார் 40 நன்கொடையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜித்குமார தண்டநாராயணா தெரிவித்தார்.
விந்தணு தானம் தொடர்பாக மருத்துவமனை தினமும் தொடர்ச்சியான தொலைபேசி விசாரணைகளைப் பெறுவதாகவும், ஆர்வமுள்ளவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் உள்ள காசல் ஸ்ட்ரீட் பெண்களுக்கான மருத்துவமனையில் முதல் விந்தணு வங்கி டிசம்பர் 4ஆம் திகதி தொடங்கப்பட்டது.
இது இனப்பெருக்க சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
"இந்த முயற்சியின் முதன்மை நோக்கம், மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு குழந்தைகளைப் பெற உதவுவதாகும். அதன்படி, விந்தணு தானம் செய்ய முன்வரும் தந்தைகள் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று டாக்டர் தண்டநாராயணா கூறினார்.
விந்தணு தானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் 0112 67 89 99 / 0112 67 22 16 என்ற தொலைபேசி எண்களில் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் ஊக்குவித்தார்.
9 hours ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Jul 2025