Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 31 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
சிலாபம்- புத்தளம் வீதியின் பங்கதெனிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 12.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் தனியார் பஸ் வண்டியொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் பங்கதெனிய பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த போது, கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ் , இ.போ.ச பஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் பஸ்ஸின் சாரதி சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
6 hours ago
7 hours ago