2026 மே 01, வெள்ளிக்கிழமை

விபத்தில் பாதித்தோரிடம் நலம் விசாரித்தார் ஜீவன்

J.A. George   / 2021 மார்ச் 21 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பசறை விபத்தில் பாதிக்கப்பட்டு, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (20) நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுடன் தனது துயரத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், காயங்களுடன் சிகிச்சைபெற்று வருவோருக்கும் உயிரிந்தோரின் குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உதவிகளை வழங்க ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .