Nirosh / 2020 டிசெம்பர் 19 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக பல்கலைக்கழகத்துக்கான இடமும் அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சார் ஜீவன் தொண்டமான், பல்கலைக்கழகம் வரவில்லை என விமர்சித்தவர்கள் தற்போது வாய் மூடி மெளனம் காப்பதாகவும் தெரிவித்தார்.
கொட்டகலையில் இன்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போத தொடர்ந்து உரையாற்றிய அவர், ''கொட்டகலை கடந்த 4 வருடங்களாக மறக்கப்பட்டிருந்தது. அபிவிருத்திகளை மேற்கொண்டால் அதன் பெயர் தொண்டமானுக்கு சென்று விடும் என்ற அச்சமே இதற்கு காரணம். மலையக பல்கலைக்கழகத்துக்கான இடமும் அதற்கு தேவையான பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் வரவில்லை என விமர்சித்தவர்கள் ஏன் இப்போது வாழ்த்த மறுக்கின்றனர்?
தற்போது மலையகத்தில் வீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் அமைச்சை பொறுப்பேற்கும் போது கொவிட் நிலைமை இலங்கையிலும், உலகத்திலும் பாரிய அச்சுறுத்தலாக காணப்பட்டது. இவ்வாறான நிலைமையில் மக்கள் மிகுந்த பொறுமையுடன் உள்ளனர். இவ்வாறான நிலையிலும் அரச இயந்திரம் இயங்குகின்றது. கொரோனாவின் அச்சுறுத்தல் மலையகத்தை பாதித்துள்ளது.
ஆயிரம் தொடர்பிலேயே பேசுகின்றனர். தொழிலாளர்களின் ஏனைய பிரச்சினைகள் காணாமல் போயுள்ளது. தோட்ட தொழில் கௌரவமற்றது என நினைப்பது தவறு. மாறாக அதை செய்விக்கின்ற முறைமையே தவறானது. தோட்ட தொழில்துறையை நவீனமயப்படுத்தி கௌரவித்தால் அந்த துறையை பாதுகாக்க முடியும்.'' எனவும் தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago