Nirshan Ramanujam / 2017 நவம்பர் 09 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைக்க வேண்டும் எனக் கூறிய விமல் வீரவன்ச, நாடாளுமன்றுக்கு வரும்போது, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என, ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன, நேற்று (08) தெரிவித்தார்.
புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்பு சபையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“விமல் வீரவன்ச, நாடாளுமன்றத்துக்கு வரும்போது, முதலாவது வாயிற் கதவிலிருந்து நாடாளுமன்ற வாசல் வரை ஒவ்வொரு கதவுகளிலும் அவரை நிறுத்தி, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவருடைய உடல், வாகனம், கோப்புகள் என அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆகக் குறைந்தது, ஒரு மணித்தியாலமாவது அவர் மீது சோதனை நடத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
53 minute ago
7 hours ago
9 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
7 hours ago
9 hours ago
28 Dec 2025