2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

விமான நிறுவனத்தின் ஊழியருக்கு கொரோனா

J.A. George   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிறுவனத்தின் பண்ட பரிமாற்று பிரிவில் கடமையாற்றும் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த நபர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுவதுடன் அவர் தற்போது சிசிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவருடன் அங்கு பணியாற்றிய 50 பேர்  பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .