Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 12 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று பிற்பகல் குஜராத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் அருகே இருந்த குடியிருப்பில் விழுந்து நொறுங்கியது.
இந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே விமானத்தில் உள்ளே இருந்தது எந்த நாட்டை சேர்ந்தவர்கள்.. குழந்தைகள் எத்தனை பேர்.. பெரியவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
விமானத்தில் மொத்தம் 217 பெரியவர்கள், 11 குழந்தைகள், 2 கைக்குழந்தைகள் என மொத்தம் 230 பயணிகள் பயணித்துள்ளனர்.
அதில் 169 இந்திய நாட்டை சேர்ந்தவர்களாவர். மேலும், விமானத்தில் இருந்தவர்களில் 53 பிரிட்டிஷ் நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடா நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதுபோக 12 விமான ஊழியர்களும் விமானத்தில் இருந்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில நொடிகளில் அதன் சிக்னல் கட் ஆகியுள்ளது.
அப்போது விமானம் சுமார் 600 அடி உயரத்தில், சுமார் 324 கிமீ வேகத்தில் பயணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் அருகே இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்து உடனடியாக கரும்புகை வெளியானது.
சுமார் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்ததாக ரிப்பளிக் டிவி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. R
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago