2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

விமானத்தில் இருந்த 242 பேரில் 169 பேர் இந்தியர்கள்

Editorial   / 2025 ஜூன் 12 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

242 பேருடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், மேற்கு இந்தியாவின் அகமதாபாத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

AI171 விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.

விமானத்தில் 169 இந்தியர்கள் இருந்தனர். 53 பிரிட்டன் நாட்டவர்கள், ஒரு கனேடிய நாட்டவர் மற்றும் ஏழு போர்த்துகீசிய நாட்டவர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

"புறப்பட்ட சில வினாடிகளுக்குப் பிறகு" 625 அடி (190 மீ) உயரத்தில் விமானத்திலிருந்து கடைசி சமிக்ஞையைப் பெற்றதாக Flightradar24 என்ற கண்காணிப்பு வலைத்தளம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .