Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 22 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்ஷன் இராமானுஜம்
2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் ஆணைக்குழு உருவாக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், திறன் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜே.வி.பி எம். பியான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மேலதிகமான தகவல்களைத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“கொமன்வெல்த் கேம்” என்ற பெயரில் இலங்கை வங்கியில் ஒரு கணக்கு பேணப்பட்டு வருகின்றதா என்பதையும் ஆம் எனில், அக்கணக்கு, யாரால் பேணப்படுகின்றது என்பதையும் அது ஆரம்பிக்கப்பட்ட திகதி என்னவென்று, நளிந்த ஜயதிஸ்ஸ கேள்விகளைக் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் கபீர் ஹாசிம், அவ்வாறானதொரு கணக்கு தற்போது பேணப்படுவதில்லை என்பதனால், ஏனைய கேள்விகள் தமது அமைச்சுடன் தொடர்புடையதல்ல எனவும் தெரிவித்ததுடன், அது தொடர்பில் மேலதிகமான தகவல்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அதன்பிரகாரம் அவர் கருத்து வெளியிடுகையில்,
இவ்வாறான கேள்வியை முன்வைத்தமைக்கு உங்களுக்கு நன்றி கூற வேண்டும். சி. டபிள்யூ.ஜி ஹம்பாந்தோட்ட 2018 பிரைவட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் பெயரில் நடைமுறைக் கணக்கு ஒன்றும், 11 மில்லியன் ரூபாயைக் கொண்டு நிலையான கணக்கு ஒன்றும் பேணப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் வழங்கியுள்ள தகவல்களின் பிரகாரம் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை ஏலத்தில் பெற்றுக்கொள்ளுதல், அவற்றுக்கான ஆவணங்களைத் தயாரிப்பதற்காக கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் நடைமுறைக் கணக்கு 2010ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 24ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய 2015ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 29ஆம் திகதி மூடப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி, 11 மில்லியன் ரூபாயைக் கொண்டு நிலையான கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் கணக்கு, 7 நாட்கள் மாத்திரமே நடைமுறையில் இருந்துள்ளது.
இந்தக் கணக்குக்கு அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை நான் சபைக்கு ஆற்றுப்படுத்துவதுடன், சில தகவல்களை இங்கே கூறுகிறேன்.
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் ரூபாய், மொபிடெல் நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் ரூபாய், ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்திடமிருந்து 7 மில்லியன் ரூபாய், கடற்படை விளையாட்டு அறக்கட்டளையிலிருந்து 2 இலட்சத்து 97ஆயிரத்து 350 ரூபாய், பீப்பள்ல் மேர்ச்சன்ட் பிஎல்சி நிறுவனத்திடமிருந்து 5 மில்லியன் ரூபாய், விளையாட்டுத் துறை அமைச்சிடமிருந்து 10 மில்லியன் ரூபாய், விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து மீண்டுமொரு தடவை 100 மில்லியன் ரூபாய், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையிடமிருந்து 8 மில்லியன் ரூபாய், ஜனாதிபதி நிதியத்திடமிருந்து 15 மில்லியன் ரூபாய், ஜனாதிபதி நிதியத்திடமிருந்து மீண்டும் 5 மில்லியன் ரூபாய், இலங்கை மின்சார சபையிடமிருந்து 89 ஆயிரத்து 809 ரூபாய், ஜனாதிபதி நிதியத்திடமிருந்து மீண்டும் 25 மில்லியன் ரூபாய் என நிதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கணக்குக்கு, அரச நிதியிலிருந்து 1 இலட்சத்து 90 ஆயிரத்து 387 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அது தவிர பேர்பெச்சுவல் எசெட் மெனேஜ்மன்ட் என்ற நிறுவனத்திடமிருந்தும் 15 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலும் பல தனியார் நிறுவனங்களிடமிருந்தும் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு 700 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது.
இதைத் தவிர மேலதிக தகவல்களை வங்கியிடமிருந்து எமக்குப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அனுமதி அல்லது நீதிமன்ற அனுமதியின் பிரகாரமே நாம் இவற்றைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
“எனக்குத் தெரிந்த வகையில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பொதுநலவாய விளையாட்டுக்கான ஏலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சென்ட் கிட்ஸ் தீவுகளுக்குச் சென்று கேளிக்கை, களியாட்ட நிகழ்வுகளிலும் சபாரிகளிலும் கலந்துகொண்டு பணத்தை வீண் விரயம் செய்திருக்கிறார்கள்” என்றார்.
குறுக்குக் கேள்வியை எழுப்பிய நளிந்த ஜயதிஸ்ஸ, சென்ட் கிட்ஸ் தீவுகளுக்கு, இலங்கையிலுள்ள நடிகர், நடிகைகள்,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
37 minute ago
43 minute ago
52 minute ago