2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விழுந்த ஆளில்லா விமானத்தால் பெரும் நஷ்டம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் வீழ்ந்ததில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமானம் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆளில்லா விமானம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமானது. கடந்த மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஆரம்ப விழாவின் போதுஉழபாதுகாப்புக்காக  விமானம் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் திடீரென தியவன்னா ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தின் பேட்டரி வலுவிழந்ததால் விபத்துக்குள்ளானதாக தற்போதைய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ​​விமானத்தை பத்திரமாக தரையிறக்க விமானப்படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் அது தோல்வியில் முடிந்ததாக தெரியவந்துள்ளது.

தியவன்னாவையில் விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் அண்மையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X