Janu / 2026 ஜனவரி 04 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் யாளினி ராஜேந்திரனின் கிரகரி வீதியில் உள்ள வீட்டிற்கு சனிக்கிழமை (03) பிற்பகல் 2.30 மணியளவில் வந்த ஒருவர், யாளினி ராஜேந்திரன் உள்ளிட்ட மூவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்த குறித்த நபர், வீட்டார் குழம்பிய நிலையில் யாளினி ராஜேந்திரனின் வலது கையை வெட்டி காயப்படுத்தியுள்ளதுடன், தடுக்க முயன்ற அவரது மகன் மீது கூறிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார். சந்தேக நபரை பிடிக்க முயன்ற அவரது தந்தையின் தலையில் வெண்கல பூச்சாடியால் தாக்கியுள்ளார்.
அத்துடன் வீட்டாரின் அலறல் சத்தம் கேட்டு, அவ்விடத்திற்கு வந்த அயலவர்கள் குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago