Shanmugan Murugavel / 2021 மே 29 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பொரளையின் மகஸின் வீதியிலுள்ள இளைஞரொருவர், கொவிட்-19 தொற்றுக்குள்ளானதையடுத்து வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போது குறித்த இளைஞருக்கு கொவிட்-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார அதிகாரிகளும், பொரளை பொலிஸ் அதிகாரிகளும் குறித்த நபரின் வீட்டுக்கு அவரை இடைநிலை சிகிச்சை நிலையத்துக்கு மாற்றுவதற்கு குறித்த நபரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, தனது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாது குறித்த நபர் வீட்டை விட்டு வெளியேறியது அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொரளை பொலிஸ் நிலையத்துக்கு 0112694019 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591587 செல்லிடத் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago