2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வீதி விபத்துகளால் நாளொன்றுக்கு 8 பேர் உயிரிழக்கின்றனர்

Editorial   / 2018 நவம்பர் 18 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி விபத்துகளால் நாளொன்றுக்கு 8 பேர் உயிரிழப்பதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன், கடந்தாண்டு மாத்திரம் சுமார் 3153 ​பேர் வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளார்களெனவும் தெரிவித்துள்ளது.

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துச் செல்வதால், வீதி விபத்துகளை குறைப்பது தொடர்பான வேலைத்திட்டமொன்று முன்னெடுப்பது அவசியம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை வீதி விபத்துகளால்  உயிரிழப்பவர்கள் 15 – 44 வயதுக்கு இடைப்பட்டவர்களென்று தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, அதிகவேகம், மது போதையில் வாகனத்தைச் ​செலுத்துதல், ​வீதி சட்டதிட்டங்களை கடைப்பிடிக்காமை, அலைபேசியில் உரையாடியாவாறே வாகனத்தைச் செலுத்துதல் போன்ற காரணங்களே வீதி விபத்துக்கான முக்கிய காரணமென்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .