Freelancer / 2025 நவம்பர் 12 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெங்காயம் மற்றும் கிழங்கு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்க தவறி உள்ளதாகவும், அதனால் அவர்களை பதவி விலகவும், அந்த அமைச்சர்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தயாசிறி ஜயசேகர எம்.பி தொடர்ந்து கூறுகையில்,
கடந்த சில தினங்களாக கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகள் வீதிகளில் இருக்கின்றனர். பொருளாதார மத்திய நிலையங்கள் செயற்பாடின்றி இருக்கின்றன. அங்கே பொருட்கள் இல்லை. அவர்கள் இப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாய அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரை பதவி விலகுமாறு மற்றும் வர்த்தக அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கின்றனர். அந்த அமைச்சுக்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அமைச்சர்கள் தமது பணிகளை சரியாக செய்யாத காரணத்தால் விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago