Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியானது தனது ஜனாதிபதி வேட்பாளரை, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே, வெளிப்படுத்தியதாக அமைச்சர் தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கட்சியின் யாப்பு மற்றும் சம்பிரதாயம் அதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இன்று (09) இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “வாக்கெடுப்பு நடத்துவதென்றால் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரை ஒன்றுக்கூட்டுவோம். அதுதான் எமது கட்சியின் சம்பிரதாயம். எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கட்சிக்கென்று யாப்பு ஒன்று உள்ளதைபோலவே சம்பிரதாயமும் உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும். தற்போது வரை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்யும் தினம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
18 minute ago