2026 மே 14, வியாழக்கிழமை

dd

’வேண்டுமென்றே செய்யவில்லை’

Niroshini   / 2021 மே 28 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது இடத்தில் முகக் கவசத்தை அணியாத குற்றத்துக்காக தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அளுத்கம - தர்கா நகரைச் சேர்ந்த நபருக்கு களுத்துறை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

நாட்டில் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, இம்மாதம் 25ஆம் திகதி அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பொருள்களை கொள்வனவு செய்வதற்கு பொதுமக்கள் வாகனங்களில் பயணிக்க முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்களில் சிலர் வீல்பரோக்களுடன் கடைகளுக்கு சென்றிருந்தனர். தர்கா நகரைச் சேர்ந்த நபரும் இவ்வாறு அன்றையத் தினம் வீல்பரோவில் பொருள்களைக் கொள்வனவு செய்துக்கொண்டு வீடுத்திரும்பிய வீடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர் முகக் கவசம் அணியவில்லை என்பதற்காக கைது செய்த பொலிஸார், அவரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியிருந்தது.

இந்நபருக்காக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி அனுஷா ஜயலத், சந்தேகநபர் வேண்டுமென்றே தவறை செய்யவில்லை எனவும், முகக் கவசம் அணியாது இந்த நபர் பொருள்களைக் கொள்வனவு செய்ய செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், பொருள்களைக் கொள்வனவு செய்துக்கொண்டு வரும்போது தனது முகக் கவசம் கீழே விழுந்துள்ளதாகவும், கீழே விழுந்த முகக் கவசத்தை கைகளில் வைத்திருந்தவாறே, மற்றொரு முகக் கவசத்தை வாங்குவதற்காக அருகில் இருந்த கடைக்குச் செல்லும்போதே அதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபரை, 1 இலட்ச ரூபாய் சரீரிப் பிணையில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .