Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரக்பி வீரர் வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வசீம் தாஜுதீன் கொலை சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை அழித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் சட்டமா அதிபரினால் இன்றைய தினம் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 25 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் பிரதிவாதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதிவாதி சார்ப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்ர பெர்ணான்டோ, குற்றப்பத்திரம் தொடர்பில் அடிப்படை எதிர்ப்பு மனுவினை தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.
4 minute ago
17 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
13 Mar 2026