Editorial / 2019 ஜூலை 25 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர், மொஹமட் ஷாபிக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மாதம் 11ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இன்று வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை, பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தமை, கட்டாய கருத்தடை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஷாபி மீது சுமத்தப்பட்டுள்ளன.
11ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பயங்கரவாத அமைப்பிடமிருந்து நிதியுதவி பெற்று, அப்பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளாரென, வைத்தியர் ஷாபிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை உறுதிப்படுத்தக் கூடிய போதிய சாட்சிகள் இல்லையென,பிரதி சொலிஷிட்டர் நாயகம் துசித் முதலிகே மன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
13 Mar 2026