Janu / 2024 ஜனவரி 09 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான அலிஸாஹிர் மௌலானா , பங்களாதேஷ் பாரளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டு ஐந்தாவது முறையாக பிரதமராக தெரிவாகியுள்ள ஷேக் ஹஸீனாவை டாக்காவில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து திங்கட்கிழமை (08) சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் தனது உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் ஹசீனா வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இச் சந்திப்பின் போது , பங்களாதேஷின் செழுமைக்கு மட்டுமல்ல, அண்டை நாடுகளுடன் அர்த்தமுள்ள ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் பிரதமர் ஹசீனாவின் அர்ப்பணிப்பானது மிகவும் ஊக்கமளிக்கிறது எனவும் அத்தகைய திறமை மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட தலைமைத்துவத்தைக் காணும் வாய்ப்பிற்காக தான் பெருமிதம் கொண்டவனாகவும் பிரதமர் ஹசீனாவின் வழிகாட்டுதலின் கீழ் தொடரும் முயற்சிகளின் சாதகமான பெறுபேறுகளைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் அலிஸாஹிர் மௌலானா எம்.பி.தெரிவித்துள்ளார்.
அஸ்லம் மெளலானா

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .