2026 மார்ச் 19, வியாழக்கிழமை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் திடீரென இரத்து

Freelancer   / 2026 மார்ச் 19 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாடுகளின்  சில பகுதிகளுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அதற்கமைய, டுபாய்க்கான விமான சேவைகள் இன்றும், நாளையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், தமாம், தோஹா குவைத் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பயண முன்பதிவுகளை செய்தவர்கள் 1979 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகங்களுக்குச் சென்று, விமான சேவைகள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .