2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ.ல.சு கட்சி- பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டள்ளது.

இரு கட்சிகளும் இணைந்து உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டமைப்புத் தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது.

எனினும் இந்தக் கலந்துரையாடல் இம் மாதம் 22ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டமைப்பை உருவாக்குவதுத் தொடர்பான அடிப்படைக் காரணங்கள் குறித்து கலந்துரையாட நியமிக்கப்பட்ட குழு விடுத்த கோரிக்கைக்கமைய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான பிரதான கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .