Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீதும் கட்சித் தலைமையகமாக தாருஸ்ஸலாம் பற்றியும், அக்கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கட்சியின் மசூரா சபை மௌலவிமாரிடம், உலமா கட்சி, கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில், உலமாக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலமா கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம், மிக அதிகமாக முஸ்லிம் காங்கிரஸையே விமர்சித்தது. அக்கட்சித் தலைமை, முஸ்லிம் சமூகத்தை பச்சையாக ஏமாற்றுகின்றது என்றும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை விற்று அனைவரும் சுகபோகம் அனுபவிக்கிறார்கள் என்றும், பல தடவை குற்றம் சாட்டினோம். இப்போது அவை யாவும் அக்கட்சிக்காரர்களாலேயே உறுதிப் படுத்தப்படுவதனால், முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களை, இறைவன் எம் மூலம் பேசவைத்துள்ளான் என்பதே உண்மை.
மது, மாது, கோடி என பல குற்றச்சாட்டுக்களை, பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ளார். இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில், மு.கா.வின் மசூரா சபையில் உள்ள மௌலவிமார், விசாரணை நடத்த வேண்டும். பசீர் சேகுதாவூத், தனது தலைவரை காட்டிக்கொடுத்து விட்டார் என, சிலர் குற்றஞசாட்டுவதன் மூலம், மேலும் மேலும் தலைமையினதும் உயர்ப்பீட உறுப்பினர்களினதும் சமூகவிரோத செயல்களுக்கே துணை கிடைக்கின்றது.
இப்படியான குற்றச்சாட்டுக்களுக்கு வெளிநாட்டு முஸ்லிமல்லாத கட்சித்தலைமகள் கூட ஆக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக தமது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு விசாரணைக்கு முகம் கொடுப்பதையும் காண்கிறோம்.
ஆகவே, பசீரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் முதல் கடமை, அக்கட்சியின் உயர்பீட மௌலவிமார்களுக்கு உண்டு என்பதை, அவர்கள் உணர்வதுடன் குற்றச்சாட்டுக்கள் பகிரங்கத்துக்கு வந்தால், அவற்றை பகிரங்கமாக விசாரிப்பதே நபி வழி என்பதால், உடனடி விசாரணை செய்து, சமூகத்தின் மானம் காக்க முன்வர வேண்டும்” என, உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago