Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Nirshan Ramanujam / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்ஷன் இராமானுஜம்
ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில், பூரண விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், விரைவில் அது தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெறும் எனவும், சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, நாடாளுமன்றில் நேற்று (19) தெரிவித்தார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“ஹம்பாந்தோட்டையில், ஒக்டோபர் 6 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, நீதிமன்ற உத்தரவை மீறியமை, அரச அதிகாரிகளான பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.
“இதன்போது ஊடகவியலாளர் ஒருவரைப் பொலிஸ் அதிகாரியொருவர் தாக்கியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில், பூரண விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேநேரம், பொலிஸ் ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
“குறித்த ஊடகவியலாளர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தாரென, விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தொடர்பிலான தகவல்கள், நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட தினேஷ் குணவர்தன எம்.பி, “நாடாளுமன்ற உறுப்பினர்களை நினைத்தவாறு கைது செய்யமுடியாது. அவர்களுக்கு உரிய நாடாளுமன்ற சிறப்புரிமை பற்றியும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். நாடாளுமன்ற உறுப்பினர் எவரையும் கைது செய்யும் உரிமை தமக்கு உள்ளதென, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பகிரங்கமாகக் கூறியுள்ளார். அவர், இந்த உயரிய சபைக்கும் சபாநாயகருக்கும் சவால் விடுத்திருக்கிறார் என்றே கூற முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .