Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 மே 20 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகங்களுக்கு முன்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பின் கீழ் இன்று (20) ஆஜர்படுத்தப்பட்டார்,
அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தபோது அதிகாரிகள் ஊடகங்களிலிருந்து அவரைப் பாதுகாத்தனர்.
கடந்த வாரம், ஹரக் கட்டா, 300 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்க மறுத்ததன் விளைவாக தங்காலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் 300 மில்லியன் லஞ்சம் கோரியதாகவும், அதனை கொடுக்க மறுத்தமை காரணமாக தங்காலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, 'ஹரக் கட்டா' கூறப்படுகிறது.
முந்தைய விசாரணைக்குப் பிறகு கொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து பொலிஸாரினால் 'ஹரக் கட்டா' அழைத்துச் செல்லப்பட்டபோது அவரால் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்களைத் தொடர்ந்து, அந்து குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
14 Jul 2025
14 Jul 2025