Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் திங்கள் கிழமை (17) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஹர்த்தால் மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
குறித்த ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என வர்த்தகர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் இரு தினங்களுக்கு முன்பு நேரடியாக சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்கு வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபை வெள்ளிக்கிழமை (15) கூடியது.இதன்போது அநேகமான நிர்வாக சபை உறுப்பினர்கள் அன்றைய தினம் வியாபார நிலையங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை (17) வியாபார செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறும் என்றும் வவுனியா வர்த்தகர் சங்கம் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது என அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
16 minute ago
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
25 minute ago