Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பெட்டிக்கலோ கெம்பஸ் நிறுவனம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோரை,எதிர்வரும் 9 ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவில் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதனைக் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுப்பட்ட போதிலும், ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா முன்னிலையாகி இருக்கவில்லை.
வௌிநாட்டுத் தூதரக குழுவினருடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்காக, வௌிநாடு செல்வதால் அவர்கள் கோப் குழுவில் ஆஜராகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தூதரக குழுவின் கூட்டத்தில் பங்கேற்றமை தொடர்பான எழுத்துமூலமான ஆவணத்துடன், எதிர்வரும் 9 ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகசுனில் ஹந்துன்னெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago