Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொம்பனி தெரு, களுத்துறை, பதுளை, ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2 கிராம் அளவிலான ஹெரோய்னை வைத்திருந்த சந்தேக நபரொருவர் கொழும்பு, கொம்பனி தெரு – வேகந்த பிரதேசத்திலும், மற்றுமொருவர் களுத்துறையிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தளை – ஷர்வூட் பகுதியில் ஓட்டோவில் 4 கிராம் ஹெரோய்னை கொண்டுச் செல்ல முயற்சி செய்த சந்தேகநபர்கள் இருவரும், 6 கிராம் அளவிலான ஹெரோய்னை வைத்திருந்த இருவர் பதுளையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை கோட்டை, களுத்துறை, பண்டாரவளை, பதுளை ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago