2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 65பேர் திருமலையில் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்ற 65பேரை கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, கும்புறுபிட்டிய பகுதியிலிருந்து இவர்கள் தங்களது அவுஸ்திரேலிய பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவரப்படுவதாகவும் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (அமதோரு அமரஜீவ) 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .