2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சபை தேர்தலில் 3 மாவட்டங்களை சேர்ந்த 1,034,249 பேர் வாக்களிக்க தகுதி

Super User   / 2012 ஜூலை 11 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த 10 இலட்சத்து 34 ஆயிரத்து 249 பேர் 2011ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதன்படி அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலசத்து 47 ஆயிரத்து 99  பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 2 இலசத்து 45 ஆயிரத்து 363 பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இம்மூன்று மாவட்டங்களிலும் 1,163 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் 464 வாக்களிப்பு நிலையங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 285 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் 74 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.  இதன்படி அம்பாறை மாவட்டத்தில் 29 நிலையங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 நிலையங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 19 நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

இம்மாகாணத்தில் 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 2009ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் 9 இலட்சத்து 95 ஆயிரத்து 612 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். எனினும் நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தலில் மேலும் 38 ஆயிரத்து 637 பேர் வாக்களிக்க உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சபைக்கு  அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களுமாக மொத்தமாக 35 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X