2025 மே 03, சனிக்கிழமை

திருமலையில் மீன்பிடி படகு மூழ்கியது; 9 மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்

Super User   / 2012 மார்ச் 16 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியாவில் ஆழ்கடலில் மீன் பிடித்து கரை திரும்பிக் கொண்டிருந்த மோட்டார் இயந்திர படகொன்று ஒன்று கடலில் கவிழ்ந்தபோது தெய்வாதீனமாக 9 மீனவர்கள் ஏனைய மீனவர்களால் காப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை கோணஸ்வர பகுதியில் உள்ள பாதாள மலைப் பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம் மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட   மீனுடன் கரையை நோக்க படகை செலுத்திக் கொண்டிருந்த போது இவ் இப்படகு கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் அமிழ்ந்துள்ளது.

இம் மீனவர்கள் ஏனைய மீனவர்களின் வள்ளங்கள் மூலம் காப்பாற்றப்பட்டு கரை சேர்க்கப்பட்டனர்.

இம் மீனவர்களின் வள்ளம், வலை, மோட்டார் இயந்திரம், என்பன் சுமார் 10 மூழ்கியுள்ளதால் பத்து இலட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 


You May Also Like

  Comments - 0

  • nawfal Saturday, 17 March 2012 06:33 AM

    தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X