2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இன்னர்வீல் கழகத்தின் 13ஆவது தலைவர் தெரிவு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை இன்னர்வீல் கழகத்தின்  13ஆவது தலைவர் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (2) டைக் வீதியிலுள்ள ரொட்டறி இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட வணக்கதுக்குரிய தந்தை நோயல் இமானுவல், திருகோணமலை ரொட்டறி கழகத்தின் தலைவர் கார்மன் அன்ரனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்னர்வீல் கழகத்தின் 2014, 2015ஆம் வருடங்களுக்கான தலைவியாக  திருமதி ஸ்பெக் சிவசுதன் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதன்போது, செல்வ இசை நடன சபா மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது, மாணவர்களுக்கு புலமைப்பரிசில், துவிச்சக்கர வண்டி, மூக்கு கண்ணாடி, தையல் இயந்திரங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X