2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஜெய்கா திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 10 கிராமங்கள் அபிவிருத்தி

Kogilavani   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


ஜெய்கா திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 10 கிராமங்களை இனங்கண்டு அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின்  கீழ், மூவின மக்கள் இணைந்து வாழும் கிராமங்களை இனங்கண்டு அக் கிராமங்களை ஜெய்கா திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இலங்கை நாட்டிற்கான ஜெய்கா இணைப்பாளருடன் கலந்துரையாடல் ஒன்றை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்த அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கொண்டிருந்தார்.

இக்கலந்துரையாடல் கிழக்கு மாகாணவீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று  புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போதே மேற்படி கிராமங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் நான்கு கிராமங்களும் மட்டக்களப்பில் மூன்று கிராமங்களும் திருகோணமலையில் மூன்று கிராமங்களுமாக பத்து கிராமங்களை  அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எ.எச்.எம்.அன்சார், அமைச்சரின் பிரத்தியோக செயலாளர், எம்.ஐ.ஜியாவூடீன், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X