2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் கைதான இந்திய மீனவர்கள் 111பேருக்கு வைத்தியப் பரிசோதனை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்ட  இந்திய மீனவர்கள் 111 பேரும் இன்று வியாழக்கிழமை வைத்தியப் பிரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி, வைத்தியர் அ.சஞ்சயன் இவர்களுக்கு வைத்தியப் பரிசோதனை  மேற்கொண்டார்;.

முல்லைத்தீவு கடற்பரப்பில் 15 படகுகளில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  இந்திய மீனவர்கள் 111 பேரை கடற்படையினர் கைதுசெய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 111 பேரும் திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு படகுகளுடன் நேற்று புதன்கிழமை அழைத்து வரப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .