2025 மே 03, சனிக்கிழமை

தந்தை செல்வாவிற்கு 114ஆவது பிறந்த தினம்: திருமலையில் அஞ்சலி

A.P.Mathan   / 2012 மார்ச் 31 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவரும் அன்புடன் 'தந்தை' என்றழைக்கப்படுபவருமான அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 114ஆவது பிறந்த தினமான இன்று சனிக்கிழமை காலை திருகோணமலை சிவன்கோவிலடியில் உள்ள அவரது நினைவுத்தூபியில் உள்ள திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செய்யப்பட்டது.

திருகோணமலை நகரசபைத்தலைவர் க.செல்வராசா மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.துரைரெட்டினசிங்கம் ஆகியோர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செய்வதையும் அதன் பின்னர் இருவரும் நினைவுத்தூபியிலிருந்து இறங்கி வருவதையும் பின்னர் அங்கு குழுமியிருந்த கட்சி அன்பர்களுடன் தூபிக்கு முன்னால் நிற்பதையும் படங்களில் காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X