2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் 14 வயது சிறுவன் மாயம்

Suganthini Ratnam   / 2012 மே 02 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)
திருகோணமலை, கிண்ணியா முதலாம் வட்டாரம் துறையடி எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள சிறுவனொருவன் கடந்த 15ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிண்ணியா தி/அப்துல் மஜீது வித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்வி பயிலும் முகம்மது நஸார்-நிப்ராஸ் (வயது 14) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளதாகவும் இச்சிறுவன் கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த நிலையிலேயே காணாமல் போனதாக பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்தனர்.

கறுப்பு நிறமான இச்சிறுவன், தலை முடியை கட்டையாக வெட்டியுள்ளார். வெள்ளை நிற கோடிட்ட நீண்ட கை ரீசேர்ட்டும்  கறுப்பு நிற  ரவுசரும் இச்சிறுவன் அணிந்திருந்துள்ளார்.

இச்சிறுவனைக் காண்பவர்கள்; கிண்ணியா பொலிஸில் அல்லது 0773381961, 0773381963 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு  தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X