2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருமலையில் 18 பாடசாலைகள் மூடல்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 22 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்திலுள்ள 18 பாடசாலைகளை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ஆம் திகதிவரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலைகள் மூடப்படுவதால், அந்நாட்களை ஈடுசெய்வதற்காக சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்தப்படும் என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.

எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதன் பிரதான வைபவம் திருகோணமலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .