Kogilavani / 2011 ஜூன் 05 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார், அமதுறு அமரஜீவ)
திருகோணமலைக்கும் மூதூருக்குமான கடல் வழி சேவையில் ஈடுபடும் சேருவில 2 கப்பல் ஒரு மாதகாலமாக சேவையில் ஈடுப்படாமையினால் மூதூருக்கு செல்லும் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பயணிகள் தரைவழியாக பயணம் மேற்கொள்ளும்போது அதகளவில் பணத்தையும் நேரத்தை செலவிட வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இக்கப்பல் சேவை இடைநிறுத்தம் குறித்து இலங்கை துறைமுக அதிகார சபையின் திருகோணமலை வதிவிட முகாமையாளர் ஜே.ஏ.சந்திர ரத்னவை தொடரபுக் கொண்டு கேட்டபோது, கப்பலில் இயந்திரங்கள் 2 பழுதடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான உதிரப்பாகங்கள் இலங்கையில் இல்லாததனால், இதனை வெளிநாட்டில் இருந்து தருவிக்க வேண்டியுள்ளது. இதனைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் மீண்டும் இச் சேவை வழமைக்கு திரும்பும் என அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago