Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையையடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 24 பேரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் விடுதலையினையடுத்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களினால் கிண்ணியா பிரதேச செயலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரோ உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதீயுதீன், ஏ.ஏச்.எம்.பௌசி உள்ளிட்ட விசேட தூதுக்குழுவொன்று விசேட ஹெலிக்கப்பட்டர் மூலம் இன்று காலை கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்தனர்.
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொதுமக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது.
இதனால், 24 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் நிலவிய பதற்ற நிலையை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிண்ணியா பிரதேச செயலகத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசு சேற்றை பூசிக்கொள்ள முன்வராது: ஹக்கீம்
திருகோணமலைக்கு செல்வதற்காக அமைச்சர் ஹக்கீம் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் முன்னர் கருத்து தெரிவிக்கையில்,
தற்போதையை அசம்பாவித சம்பவங்களின் பின்னணியில் உள்ள சக்திகளை சரிவர இனங்கண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முழு அளவிலான விசாரணையொன்றை தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருப்பதாகவும், தம்மைப்போன்ற அரசியல் மேல்மட்ட தலைமைகள் இது விஷயத்தில் அதிக கரிசணை கொண்டிருப்பதாகவும் கூறினார்.
சிலர் குற்றம் சுமத்துவதைப் போன்று அரசாங்கம் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டு தன் மீது சேற்றைப் பூசிக்கொள்ள ஒரு போதும் முன் வராது என தாம் நம்புவதாகவும், தம்மைப் போன்றவர்கள் அரச சார்பாகவே நடந்து கொள்வதாக சிலர் நினைப்பதுவும் முற்றிலும் தவறென்றும் அவர் குறிப்பிட்டார்.
குற்றச் செயல்களை தடுப்பதும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதும் பொலிஸாருக்குரிய கடமைகள் என்றும், தேவையேற்படும் பொழுது கலகம் அடக்கும் கடமையில் ஈடுபட வேண்டிய முப்படையினர் பொலிஸாருக்குரிய அலுவல்களில் தலையிடுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றும் அவர் சொன்னார்.
உண்மையிலேயே பொதுவாக சிறுபான்மையினரும் குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில், அதுவும் புனித ரமழான் நோன்பை அனுஷ்டிக்கும் இவ் வேளையில் இவ்வாறான வேண்டத்தகாத துர்ப்பாக்கிய அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வது துக்ககரமானதென்றும் இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கக் கூடாதென்று இறைவனை பிரார்த்திக்குமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டார். (படங்கள்: எம்.பரீட்)
meenavan Monday, 15 August 2011 08:25 PM
இருபத்திநாலு பேரும் விடுதலையானது மகிழ்ச்சிதான். பரீட்சைக்கு தோற்றவிருந்த ஐவரினதும் எதிர்காலம் எப்படி அமையுமோ? நீதியமைச்சர் அவதானமாக இருக்கவும்.
Reply : 0 0
Abdul salam Monday, 15 August 2011 09:21 PM
கடைசி நேரத்திலாவது மாணவர்களை விட்டது போதும்.
Reply : 0 0
oor kuruvi Tuesday, 16 August 2011 03:13 AM
படிக்கிற மாணவனுக்கு இங்கு என்ன வேல? பரீட்ச நேரத்துல புத்தகமும் கொப்பியுமா இருக்காம வன்முறையில ஈடுபட்டது பிழைதானே? இப்ப இவர்ற பரீட்ச்ச நிலைமை எப்படி சிந்திக்காம செயல்பட்டதால ஒருவருஷம் அவுட்.
Reply : 0 0
RAFI Tuesday, 16 August 2011 04:57 AM
படிப்பு முக்கியம் அதைவிட ஊரும் குடும்பமும் முக்கியம் எல்லேரையும் இழந்த பிறகு படிப்பு???
Reply : 0 0
naleem Tuesday, 16 August 2011 03:10 PM
அவர்கள் சண்டைக்குப் பேனாவர்கள் அல்ல, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பாவம் அவர்களை கைது செய்தது.
Reply : 0 0
Nispulla Tuesday, 16 August 2011 03:52 PM
கிண்ணியாவில் நடந்த கைது கலவரத்தில் இருந்தவர்கள் இல்லை .
Reply : 0 0
Muzammil Tuesday, 16 August 2011 08:44 PM
அவர்களே தங்களை அரசியல் மேல்மட்ட தலைமைகள் என்று மட்டும் சொல்கிறார்களே தவிர!!!! செயல்களில் வரும்போது எங்கே எந்த தலைமைகள்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
30 minute ago
31 minute ago