2025 மே 08, வியாழக்கிழமை

முன்னாள் பிரதேச சபை தவிசாளரின் வீட்டில் 25 கோழிகள் மர்மமாக கொல்லப்பட்டன

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.கனியூம் வீட்டு வளவில் புகுந்த இனந்தெரியாத நபரொருவர், கோழிக்கூட்டை வெட்டி வளர்ப்புக் கோழிகளை கூரான ஆயுத்தினால் குத்தியும் வெட்டியும் கொன்றுள்ளார். கிண்ணியா அப்துல் கபூர் வீதியிலுள்ள அவரின் வீட்டில்  நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதனால் சுமார் 25 கோழிகள் இறந்துள்ளதாக கிண்ணியா பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தெரிவித்தார். இது தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதேவேளை, நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு இந்த வீட்டிற்குப் அருகிலுள்ள வீட்டிலும் கோழிகள் 4 வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் இறந்து கிடந்தன.


You May Also Like

  Comments - 0

  • meenavan Wednesday, 24 August 2011 09:22 PM

    கிரீஸ் மனிதன் , கோழிகளை கொல்லும் மனிதனாக வேடம் பூண்டுள்ளானோ?

    Reply : 0       0

    rizadh Rock Thursday, 25 August 2011 12:17 AM

    அடப் பாவிகளா கோழிகளையுமா...???

    Reply : 0       0

    V.P.K Thursday, 25 August 2011 12:39 AM

    மோப்ப நாயை பயன்படுத்தலாமே , அதற்கு கோத்தாவின்
    அனுமதி ??????????

    Reply : 0       0

    hari Thursday, 25 August 2011 05:04 AM

    உண்மையான ஆண்பிள்ளயாயிருந்தா கிண்ணியா மக்களிடம் நேரே மோதியிருப்பான். பாவம் இவன் சரியான் பயந்தவன் போல இருக்கு அதுதான் கோழிகளிடம் போயிருக்கான்.

    Reply : 0       0

    appavi Thursday, 25 August 2011 03:34 PM

    ஏன்யா இப்படி எல்லாம் அநியாயம் பண்றீங்க! பாவம்யா அந்த கோழிகள். அதுங்க உங்களுக்கு என்ன பண்ணிச்சு.ஏன் இந்த கொலைவெறி! ஏன்!

    Reply : 0       0

    fasman Friday, 02 September 2011 03:38 AM

    ஏன், பரித் வேற செய்தியெல்லாம் கிடைக்கலயப்பா, தயவு செய்து நல்ல செய்திய போட்டிடுப்பா.... எப்பவும் இப்படி டப்பாங்குத்து செய்தியத்தானே போடுறாய்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X