Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
முப்படைகளையும் சேர்ந்த சுமார் 2,500 படையினர் பங்குபற்றும் விசேட பயிற்சி ஒத்திகையொன்று திருகோணமலையில் நடைபெறுகிறது. புதன்கிழமை ஆரம்பமான இப்பயிற்சியில் இலங்கை இராணுவத்தின் கொமான்டோ மற்றும் விசேட படைப்பிரிவினர் 1,600 பேரும் பங்குபற்றுகின்றனர்.
இரண்டாவது தடவையாக நடைபெறும் கடல், வான், தரை பயிற்சிகள் அடங்கிய இப்பயிற்சித் திட்டத்திற்கு ' நீர்க்காகத் தாக்குதல் ' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் திகதிவரை இப்பயிற்சிகள் நடைபெறும்.
பாதுகாப்புப் படைகளின் தீர்மானம் மேற்கொள்ளல், மற்றும் முக்கிய கட்டளை ஆற்றல்களின் வினைத்திறன் ஆகியவற்றை விருத்தி செய்வதை இப்பயிற்சிகள் இலக்காக கொண்டுள்ளன.
'இராணுவமும் கடற்படையும் இப்பயற்சியில் முக்கிய பங்குவகிக்கம் இரு தரப்புகளாக இருக்கும். துருப்புகள் கடலிலிருந்து தரைக்கு இறக்கப்படும். அதன்பின் அவர்கள் நிறைவேற்றுவதற்காக விசேட இலக்கொன்று நிர்ணயிக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி கூறினார்.
இப்பயிற்சித் திட்டம் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத்ஜயசூரியவின் சிந்தனையில் உதித்ததாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
9 hours ago