2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்திற்கு 3 இன்சிநேற்றர்ஸ் உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 24 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்


இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்திற்கு இருபத்து நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 இன்சிநேற்றர்ஸ்  உபகரணங்களை வழங்கி உள்ளது.

இதனை கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

செஞ்சிலுவைச்சங்கத்தின் திருகோணமலை கிளை தலைவர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன், கிளை நிறைவேற்று அதிகாரி மருத்துவர் க.ரவிச்சந்திரன், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட உத்தியோகத்தர் கெல்வின் ஆகியோர் இணைந்து இவ் உபகரணங்களை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி கௌ.ஞானகுணாளனிடமிடம் கையளித்தனர்.

இவ் உபகரணங்கள் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய இடங்களான் தோப்புர், மூதூர், ஈச்சிலம்பற்று ஆகிய மூன்று மருத்துவமனைகளுக்கும் கழிவு முகாமைத்துவ தேவைகளுக்காக  பயன்படுத்துவதற்காக வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி அ.ராஜ்மோகனும் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .