2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 36 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்

திருகோணமலை கிழக்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  36 இந்திய மீனவர்களை கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்னர்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களையே இன்று வியாழக்கிழமை முற்பகல் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் 4 படகுகளில் எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இவர்கள் திருகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டுள்ள இந்த மீனவர்கள் 36 பேரையும் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் கடற்படையினர் இன்றையதினம்  மாலை ஒப்படைக்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த  மீனவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .